தீபாவளி நிகழ்ச்சியில் அணிந்த நகையால் சர்ச்சையில் சிக்கிய கரீனா கபூர்! சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தகவல்!
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் அணிந்திருந்த விலையுயர்ந்த மரகதக் கல் பதித்த நெக்லஸ் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தின்போது கரீனா அணிந்திருந்த அந்த நகையில், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஆயத்துல் குர்ஸி வசனம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நகை தொடர்பாக சமூக ஆர்வலர் அப்பாஸ் ஹபீஸ் உள்ளிட்ட சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கரீனா கபூருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கரீனா கபூரின் நகைத் தேர்வும் பேசுபொருளாகியுள்ளது.