வாட்டர்மெலன் திவாகருக்கு சரியான பாடம் புகட்டிய இயக்குநர் சேரன்! அரங்கையே அதிரவைத்த சம்பவம்
சமூக வலைத்தளங்களில் வாட்டர்மெலன் ஸ்டார் எனப் பிரபலமான திவாகருக்கு இயக்குநரும் நடிகருமான சேரன் சரியான அறிவுரை வழங்கிய சம்பவம் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்ற திவாகர், பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தனது வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.
இந்நிலையில், சேரன் தொகுத்து வழங்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'யார் சரி?' நிகழ்ச்சியில் திவாகர் கலந்துகொண்டார். அப்போது தனது திறமை குறித்துப் பேசிய அவர், தனது வீடியோக்கள் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த சேரன், மற்றவர்களிடம் நிரூபிக்க வேண்டியது உண்மையான திறமை மட்டுமே என்றும், தன்னை மிகப்பெரிய நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
குறிப்பாக, நடிகர் சிவாஜி கணேசனுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியது தனக்கே கோபத்தை ஏற்படுத்தியதாக சேரன் தெரிவித்தார்.
மேலும், கர்ணன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்ததைப் போல நடிக்குமாறு திவாகரிடம் கூறியபோது, அவர் நடித்த விதம் அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.