ராமாயணம் படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கம்! மனவேதனையுடன் உருக்கமாக பதிவிட்ட பிரபல நடிகர்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் 'ராமாயணம்'. இத்திரைப்படம் நவம்பர் 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் சுமந்திரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யேன் சதுர்வேதியின் காட்சிகள் படத்தின் இறுதிப்பதிப்பில் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், உருக்கமான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு நடிகர் படமாக்கும் அனைத்து காட்சிகளும் இறுதியில் திரையில் இடம்பெறுவதில்லை. இது எங்களது பயணத்தின் ஒரு பகுதியாகும். ராமாயணம் திரைப்படத்தில் சுமந்திரனாக நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன.
இருப்பினும், நமது இதிகாசத்தில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டதும், இவ்வளவு பிரம்மாண்டமான திரைப்படத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும் மிகப்பெரிய அனுபவமாகும்.
எனது காட்சிகள் திரையில் இடம்பெறாவிட்டாலும், அந்த அனுபவமும் நினைவுகளும் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி. ஜெய் ஸ்ரீராம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தன்னைத் தேர்வு செய்த படத்தின் நடிகர்கள் தேர்வுப் பொறுப்பாளர் முகேஷ் சாப்ராவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.