47 வயதிலும் குறையாத அழகு! சேலையில் அசத்தும் நடிகை சமீரா ரெட்டி... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் சமீரா ரெட்டி. குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
இதனைத் தொடர்ந்து அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து கவனம் பெற்றார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சமீரா ரெட்டி, பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
தற்போது திரைப்படங்களில் அதிகம் தலைகாட்டாவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது 47 வயதாகும் சமீரா ரெட்டி, சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அவரது அழகான தோற்றத்தையும் நேர்த்தியான சேலை அலங்காரத்தையும் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.