இணையத்தில் கசிந்ததா ராமாயணம் திரைப்படம்? அதிரடி சட்ட நடவடிக்கைக்கு தயாரான படக்குழு!

இணையத்தில் கசிந்ததா ராமாயணம் திரைப்படம்? அதிரடி சட்ட நடவடிக்கைக்கு தயாரான படக்குழு!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணம்' இணையத்தில் கசிந்த காட்சிகளால் புதிய சர்ச்சையைச் சந்தித்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளில் சிலர் செல்போன்களில் காட்சிகளைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்கள் மற்றும் மெசேஜிங் தளங்களில் பகிர்ந்து வருவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படக்குழு கடும் எச்சரிக்கை!

அனுமதியின்றி படத்தின் காட்சிகளைப் பதிவு செய்து இணையத்தில் பகிர்வது பதிப்புரிமை மீறல் மட்டுமல்லாமல் சட்டப்படி குற்றமாகும் எனப் படக்குழு எச்சரித்துள்ளது.

ஏற்கனவே இணையத்தில் காட்சிகளைப் பதிவேற்றியவர்கள் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவும் அமல்!

இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 2 மற்றும் 6ஆம் தேதிகளில் மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் படக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அனுமதியின்றி படத்தைப் பதிவு செய்தல், பதிவேற்றுதல் அல்லது பகிர்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல், சிவில் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாகப் பகிரப்படும் படக்காட்சிகள் மற்றும் இணைப்புகளைப் புகாரளிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என இணையதள சேவை நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமாயணம் படத்தில் நடித்துள்ளவர்கள்!

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.

படத்தின் காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைத் தடுக்க படக்குழு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

LATEST News

Trending News