நாகபந்தம் திரை விமர்சனம்

நாகபந்தம் திரை விமர்சனம்

நாகபந்தம்

தெலுங்கு சினிமா சில வருடங்களாக பேண்டசி, கடவுள் கதைகளை வைத்து வசூல் வேட்டையில் இறங்க அதே பாணியில் அபிஷேக் நாம இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் வெளிவந்துள்ள இந்த நாகபந்தம் எப்படி? பார்ப்போம்.

 

கதைக்களம்

பல வருடமாக மரத்தில் புதைந்து இருக்கும் வில்லன் பிரம்ம கமலம் கிடைத்தால் தான் மிகப்பெரிய சக்தியை அடையாளம் என இருக்கிறான், அதற்கு ஒருவர் உதவியும் செய்கிறார், அதே நேரத்தில் நாகபந்தம் புத்தகத்தை ஒரு அமெரிக்கர் கைப்பற்றி எங்கே வைத்திருக்கிறேன் என்று சொல்லாமலேயே இறக்கிறார்.

இந்த நிலையில் நாயகன் விராட் சந்தோஷமாக தன் குடும்பத்துடன் வாழ, அவருக்கு பிரம்ம கமலம் எடுக்கும் வேலை கிடைக்கிறது, இதை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் தங்கச்சி கல்யாணம் நடக்கும் என்பதால் சம்மதிகிறார்.

அப்போது பெரிய விபத்தில் அந்த பிரம்ம கமலத்தை நாயகன் தவறவிட, பிரம்ம கமலம் விராட்-டிடம் தான் உள்ளது என வில்லன் பர்ஸ்ட் சீன்-ல் தனக்கு உதவ ஒருவரை தயார் செய்ய அவன் வந்து நாயகன் தங்கச்சி திருமணத்தை நிறுத்தி அங்கிருப்பவர் எல்லோரையும் கொன்று குவித்து ஒரு சில டுவிஸ்ட்டுடன் அந்த பிரம்ம கமலத்தை தூக்கி செல்கிறார்.

பிறகு தான் அடைந்த துரோகத்தை அறிந்த நாயகன் அந்த பிரம்ம கமலத்தை கைப்பற்றி நாகபந்தம் புத்தகத்தை கண்டுபிடித்தாரா, நாயகன் ருத்ரா யார்? அவர் பின் உள்ள மர்மம் என்ன என்பதே மீதிக்கதை.

நாகபந்தம் திரை விமர்சனம் | Nagabandham Movie Review

படத்தை பற்றிய அலசல்

கதைக்களம்ல ஓரளவுக்கு நாங்க கதைய சொல்லிட்டோம்னு நினைக்கிறோம், ஏனெனில் படத்தின் கதையை புரிந்துகொள்ளவே விமர்சன குழு தனிப்படை அமைக்க வேண்டும் போல. படம் எதை நோக்கி செல்கிறது என்ற புரியவில்லை, பைராகி, கலி, அவர்களிடமிருந்து கெகபதி பாபு, அங்கிருந்து நாயகன் விராட் பிறகு அவருடைய குடும்ப சண்டை, இந்த கேப்-ல் பிரம்ம கமலத்தை ஜெகபதி பாபு திருடுகிறார்.

அந்த பிரம்ம கமலம் தொலைந்து ஹீரோ எடுக்க போக, வில்லன் கலி நாயகன் குடுமத்தையே கொன்று குவிக்க அங்கிருந்து நாயகன் தான் யார் என்பதை அறிய அட போங்கப்பா....என்ற நிலை வந்துவிடுகிறது.

நாகபந்தம் திரை விமர்சனம் | Nagabandham Movie Review

 

சரி நாகபந்தம், பிரம்ம கமலம் தேடி போறாங்க இண்டியானா ஜோன்ஸ் போல் இருக்கும் என பார்த்தால் திடிரென முகாலயர்கள் படையெடுப்பு, கோவில் கொள்ளை, மதம் பெருமை பேசுவது என நாம் என்ன படத்துக்கு வந்தோம், என்ன பார்த்துகொண்டு இருக்கிறோம் என்ற மனநிலையை உருவாக்கிவிட்டது.

டெக்னிக்கலாக ஸ்டெண்ட் காட்சிகள் நன்றாக இருந்தாலும் படத்தில் சுமார் 25 ஆயிரம் பேரையாது கொன்று குவித்து இருப்பார்கள், இதில் பாகுபலி, சலார், அனகோண்டா, 300 என பல படங்களை மிக்ஸ் செய்து எடுத்துள்ளனர். இசை தலைவலி.

க்ளாப்ஸ்

சண்டைகாட்சி

பல்ப்ஸ்

மற்ற அனைத்தும்

1.5/5 

LATEST News

Trending News