ஜெயிலர் 2 அப்டேட் வந்தது.. முதல் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. பட்டாசா இருக்கப்போகுது

ஜெயிலர் 2 அப்டேட் வந்தது.. முதல் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. பட்டாசா இருக்கப்போகுது

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். படம் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் இன்று படத்தின் முதல் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு; அதன்படி வெளியிடவும் செய்திருக்கிறார்கள்.

ரஜினிக்கு தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக ரஜினி இனிமேல் அவ்வளவுதான்; அவரால் முன்னர் போல் திரையில் மேஜிக்கோ, தாக்கத்தையோ செலுத்த முடியாது, அவரது கரியரே காலி என்றெல்லாம் பேசினார்கள். அப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருந்தது.

Jailer 2 First Single Release Date Announced Rajinikanth Fans Go Crazy Over the Latest Update

ஓவர் நெகட்டிவ் பேச்சு: இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் இருக்கும்போது; பீஸ்ட் படத்தை இயக்கி தோல்வி முகத்தில் இருந்த நெல்சனோடு இவர் ஏன் சேர்கிறார் என்றுதான் பேச்சுக்கள் முதலில் கிளம்பின. பெரும்பாலானோருக்கு நெல்சன் மீது சுத்தமாக நம்பிக்கையே இல்லை. ஆனால் ரஜினிகாந்த் தன்னுடைய இயக்குநரை முழுக்க முழுக்க நம்பினார். அதன் பலனாக நெல்சனும் முழு உழைப்பை போட; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இரண்டு பேருக்குமே திரைத்துறையில் பெரிய வெற்றியை கொடுத்தது.

ஜெயிலர் 2: அந்தப் படத்தின் வெற்றியால் ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகமடைந்தது. மேலும் இரண்டாவது பாகத்துக்கான விதையையும் அந்த வெற்றி சூடு இருக்கும்போதே சன் பிக்சர்ஸ் போட்டுவிட்டது. அதன்படி ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி பிறகு ஷூட்டிங்கையும் ஆரம்பித்தார் இயக்குநர். இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிகிறது. அனிருத் வழக்கம்போல் இசையமைக்கிறார்.

பாலிவுட் நட்சத்திரம்: மேலும் இதில் முதல் பாகத்தில் நடித்த மற்ற மொழி பிரபலங்களும் இருப்பதாகவே தெரிகிறது. ஷாருக்கானை நடிக்க வைக்க இயக்குநர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டதால் ஹிருத்திக் ரோஷனை கமிட் செய்துவிட்டார்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் மும்முரமாக நடந்துவருகின்றன. அக்டோபர் 15ஆம் தேதி படமானது ரிலீஸாகும் என்ற அறிவிப்பும் வந்துவிட்டது. முதல் பாகம் போன்றே இந்த பாகமும் கண்டிப்பாக சம்பவம் செய்யும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

படத்தின் முதல் அப்டேட்: இந்நிலையில் படத்திலிருந்து முதல் அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் முதல் சிங்கிள் வரும் 21ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்போடு கலக்கலான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. முதல் சிங்கிள் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

LATEST News

Trending News