ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய அவதாரம்.. சட்டுனு தொகுப்பாளரா மாறிட்டாரே ப்பா.. சூப்பர் சம்பவம்

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய அவதாரம்.. சட்டுனு தொகுப்பாளரா மாறிட்டாரே ப்பா.. சூப்பர் சம்பவம்

சென்னை: உலக அளவில் புகழ் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர், கோல்டன் குளோப், கிராமி என பல சர்வதேச விருதுகளை வென்ற அவர்; கடைசியாக தமிழில் லால் சலாம், தக் லைஃப் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார். அடுத்ததாக அவரது இசையில் ராமாயணம் திரைப்படமும் வரவிருக்கிறது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ரஹ்மான்.

தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். குடும்பத்தின் பொருளாதாரத்துக்காக படிப்பை பாதியில் விட்டுவிட்டு இசைத்துறைக்குள் வந்த அவர்; இளையராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணியாற்றினார். அதனையடுத்து விளம்பர படங்களுக்கு இசையமைத்தார். அப்படிப்பட்ட சூழலில் மணிரத்னத்துக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு வந்ததை அடுத்து; தன்னுடைய ரோஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை புக் செய்தார்.

AR Rahman Turns Host Oscar-Winning Composer to Anchor Tamil Idol on Sony LIV s Sony Vizha

பிஸியான ரஹ்மான்: ரோஜா பட பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்ததை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் கொடி உயர பறக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் ராஜாவின் கோட்டையாக இருந்த தமிழ் சினிமாவை; மொத்தமாக பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டு. தமிழில் அவர் கொடுத்த ஹிட் பாடல்கள் காரணமாக பாலிவுட் கதவுகளும் திறக்க; அங்கேயும் சென்று தனது தடத்தை ஆழமாக பதித்தார் இசைப்புயல்.

ஆஸ்கர் விருதுகள்: கோலிவுட், பாலிவுட் என வளர்ந்த அவருக்கு ஹாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர்; ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்த ஜெய் ஹோ பாடலுக்காக கோல்டன் க்ளோப், கிராமி, ஆஸ்கர் விருதுகளை அள்ளினார். ஆஸ்கர் விருது வென்றதிலிருந்து ஆஸ்கர் நாயகன், ஆஸ்கர் தமிழன் என்று கொண்டாடப்படுகிறார். அவரது இசைக்கென்று தனி கூட்டமே பித்து பிடித்து இருக்கிறது.

அடுத்த படங்கள்: கடைசியாக தமிழில் அவர் காதலிக்க நேரமில்லை, தக் லைஃப், படங்களுக்கு இசையமைத்தார். ஹிந்தியை பொறுத்தவரை தேரே இஷ்க் மெய்ன் படத்துக்கு இசையமைத்திருந்தார். மேலும், ராமாயணம் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். அவருடன் ஹான்ஸ் ஹிம்மரும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார்.

LATEST News

Trending News