காமன் மேனில் ஓவியா.. டிரான்ஸ்பரன்ட் உடையில் இந்த முதல் சீசன் பிக் பாஸ் போட்டியாளர்.. குவியும் ட்ரோல்

காமன் மேனில் ஓவியா.. டிரான்ஸ்பரன்ட் உடையில் இந்த முதல் சீசன் பிக் பாஸ் போட்டியாளர்.. குவியும் ட்ரோல்

சென்னை: நடிகை ஓவியாவுக்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் ஓவியா நடித்த ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

சுத்தமாக மார்க்கெட் இழந்த நிலையில், யூடியூப் வெப்சீரிஸ்களில் நடித்து வந்தார். ஓவியாவின் லீக்கான வீடியோ என வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், மீண்டும் விஜய் டிவி கதவை தட்டி பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் நடுவராக வந்து அமர்ந்துள்ளார். ஓவியாவை போலவே பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ரைசா வில்சனும் கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் நடிகையாகவே மாறிவிட்டார். இந்நிலையில், டிரான்ஸ்பரன்ட் உடையில் அவர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன.

பிக் பாஸ் போட்டியாளர்: வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் உதவியாளராக நடித்த ரைசா வில்சன் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அவருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் வீட்டுக்குள் கெமிஸ்ட்ரி தீயாக ஒர்க்கவுட் ஆன நிலையில், இளன் இயக்கத்தில் வெளியே வந்ததும் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தனர். அந்த படம் கொடுத்த வெற்றிக் காரணமாக இருவரும் தனுசு ராசி நேயர்களே படத்திலும் இணைந்தனர். ஆனால், அதன் பின்னர் ரைசா வில்சனுக்கு பெரிதாக படங்கள் கை கொடுக்கவில்லை. ஜி.வி. பிரகாஷ் உடன் அவர் இணைந்து நடித்த காதலிக்க நேரமில்லை படமும் இன்னும் ரிலீஸ் செய்ய நேரமில்லாமல் கிடப்பில் கிடக்கின்றது.


டிரான்ஸ்பரன்ட் உடையில் ரைசா வில்சன்: தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வேறலெவல் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை கவர்ந்து வரும் ரைசா வில்சன் கிரண் மாதிரி சப்ஸ்கிரிப்ஷன், ஆப் என இறங்கிவிடுவாரா என எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், டிரான்ஸ்பரன்ட் உடையில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ரைசா வில்சன். இவரும் மீண்டும் பிக் பாஸ் பக்கம் ஓவியா போல வருவாரா என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News