சூர்யா, விஷால் படம் மட்டுமல்ல.. என் பொண்ணு படமும் நாளைக்கு ரிலீஸ் ஆகுது.. வனிதா விஜயகுமார் போஸ்ட்!
சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமாவில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷாலின் மகுடம் உள்ளிட்ட படங்கள் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், வனிதா விஜயகுமாரின் மகளும் பிக் பாஸ் பிரபலமான ஜோவிகாவின் படமும் நாளை வெளியாகிறது என அவரது அம்மா வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும் வொர்த்தான படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகின்றன. ரசிகர்களை பெரிதும் ஏமாற்றாமல் தக் லைஃப், கூலி போல தலைவலி கொடுக்காமல் பல படங்கள் மினிமம் கியாரண்டி ரகத்திலும் சில படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாகவும் மாறி வருகின்றன.
இந்நிலையில், இந்த வாரமும் ரசிகர்களை சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷாலின் மகுடம் உள்ளிட்ட படங்கள் ஏமாற்றாமல் வெளியே அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தெலுங்கில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா நடித்துள்ள அகதா திரைப்படமும் நாளை வெளியாகிறது.
வனிதா விஜயகுமார் மகள் படம்: டோலிவுட் இயக்குநர் எம்.எஸ் ராஜு எழுதி இயக்கியுள்ள அமானுஷ்யங்கள் நிறைந்த ஹாரர் படமான அகதா நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் காமாட்சி பாஸ்கர்லா, ஷ்ரவன் ரெட்டி உள்ளிட்டோருடன் ஜோவிகா விஜயகுமாரும் நடித்துள்ளார். ஹாரர் படமான அகதா திரைப்படம் ஆந்திரா, தெலங்கானாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பெரும் போட்டிக்கு நடுவே ஒரு சில தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது என வனிதா விஜயகுமார் தனது மகளுக்காக புரமோஷனில் குதித்துள்ளார்.
பவிஷ் படத்தில் வனிதா: இந்த ஆண்டு தனுஷின் மருமகன் பவிஷ் நடித்த லவ் ஓ லவ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதர் சங்க தலைவியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். தியேட்டர்களில் அந்த படம் ஓடவில்லை என்றாலும், ஓடிடியில் வெளியான பின்னர், அந்த பர்த்டே பார்ட்டி உள்ளிட்ட பல சீன்கள் வைரலாகி வருகின்றன.
என் பொண்ணு படமும் ரிலீஸ் ஆகுது: ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷாலின் மகுடம் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், தனது மகள் ஜோவிகாவின் படமும் வெளியாகிறது என படம் வெளியாகும் சில தியேட்டர்களின் புக் மை ஷோ ஸ்க்ரீன் ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். இந்த படத்தையும் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.