கணவர் தோள் மீது கால் வச்சு ஒரு போஸ்.. குஷ்பு மகளின் தாறுமாறு போட்டோஷூட்.. கதறும் நெட்டிசன்கள்!

கணவர் தோள் மீது கால் வச்சு ஒரு போஸ்.. குஷ்பு மகளின் தாறுமாறு போட்டோஷூட்.. கதறும் நெட்டிசன்கள்!

சென்னை: 1980களில் குழந்தை நட்சத்திரமாக இந்தித் திரையுலகில் நுழைந்து, 1990-ல் வெளியான வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து தென்னக திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்.

நடிகை குஷ்பு: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரவுண்டி கட்டி நடித்து வந்த குஷ்பு. முறைமாமன் படத்தில் நடித்த போது இயக்குநர் சுந்தர் சி-யைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அவந்திகாவிற்கு அண்மையில் கோவாவில் ஆழ்கடலில் மிதந்த ஆடம்பரக் கப்பலில், இந்தியக் கடற்படை அதிகாரியான ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் என்பவருடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Kushboo Avantika photo

நடிகை அவந்திகா சுந்தர்: அம்மாவை போலவே நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்ட அவந்திகா, திருமணத்திற்கு முன்பே தமிழில் 'அட்டாக்கர்' மற்றும் மலையாளத்தில் 'ஆரம்பம்' என இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வந்த நிலையில் தான் காதலில் விழுந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நடிப்பை தாண்டிச் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

Kushboo Avantika photo

கொந்தளிக்கும் கமெண்ட் செக்ஷன்: இந்நிலையில், தன் கணவர் ஷ்ரவனுடன் இணைந்து அவர் நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அடர்ந்த சிவப்பு நிற கவர்ச்சி உடையில், உடம்பெல்லாம் டாட்டூக்களுடன் ஜொலிக்கும் அவந்திகா, கீழே அமர்ந்திருக்கும் தனது கணவரின் தோள் மீது காலைத் தூக்கி வைத்துக்கொண்டு கொடுத்துள்ள போஸ் இணையத்தைக் கபளீகரம் செய்து வருகிறது. இந்தச் சூடான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், என்னம்மா அவந்திகா என்ன இதெல்லாம், இப்படி இறங்கி அடிச்சிருக்கீங்களே என்றும், ஒரு கடற்படை அதிகாரியையே இப்படி உட்கார வச்சுட்டீங்களே என்றும் கமெண்ட் பாக்ஸில் கிண்டலாகவும் ஆச்சரியத்துடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ரொமான்டிக் போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது!

LATEST News

Trending News