துடக்கம் (மலையாளம்): திரை விமர்சனம்

துடக்கம் (மலையாளம்): திரை விமர்சனம்

மோகன்லாலின் மகளான விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் துடக்கம் திரைப்படம் அவருக்கு நல்ல தொடக்கத்தை தந்ததா என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

மீனு (விஸ்மயா) தனது மாற்றுத்திறனாளி அப்பா ரவி (சாய் குமார்) உடன் இடுக்கியில் வசித்து வருகிறார்.

கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ரவியிடம் இருவர் தங்களுக்கு சாதகமாக ஒரு வேலையை செய்துகொடுக்க நிர்பந்திக்கின்றனர்.

ஆனால், அவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்க; நாங்கள் என்ன செய்கிறோம் என்று பார் என எச்சரித்துவிட்டு செல்கின்றனர்.

துடக்கம் (மலையாளம்): திரை விமர்சனம் | Thudakkam Movie Review

 

இந்த சூழலில் பணத்திற்காக கொலை செய்வதுடன், போதையிலும் குற்றச்செயலில் ஈடுபடும் நபர் இடுக்கிக்கு வருகிறார்.

அதே சமயம் பேங்க் தேர்வு எழுத செல்வதாகக் கூறி செல்லும் மீனு இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கடைசியாக அவர் தன் அப்பாவிடம் போனில் பேசும்போது யாரோ தொந்தரவு செய்திருக்கிறார்கள்; அப்போது போன்கால் கட் ஆகிவிடுகிறது.

இதனால் பயந்துபோன அப்பா ரவி போலீசில் புகார் அளிக்க தேடுதல் தொடங்கப்படுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

ஓம் ஷாந்தி ஓஷானா, 2018 ஆகிய படங்களைக் கொடுத்த ஜூட் ஆன்டனி ஜோஸப் எழுதி இயக்கியிருக்கும் படம்தான் இந்த துடக்கம்.

முதல் பாதியை பரபரப்பான த்ரில்லர் மோடில் கொண்டு செல்லும் இயக்குநர், இரண்டாம் பாதியை அப்படியே வேறு தளத்தில் கொண்டுசென்றுள்ளார்.

காணாமல்போன இளம்பெண் என்ன ஆனாள் என்ற கேள்விக்கான விடையை, அட இவ்வளவுதானா என்று நாம் கேட்பதுபோல்தான் கொடுக்கிருக்கிறார்.

அத்துடன் போலீஸ் விசாரணையில் எங்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யாதது ஏன் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

இரண்டாம் பாதியில் இப்படித்தான் திரைக்கதை நகரப் போகிறது என எளிதாக நம்மால் யூகிக்க முடிகிறது. கிளைமேக்ஸ் திருப்திகரமான ஒன்றுதான்.

நடிகர்களைப் பொறுத்தவரை மீனு என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக விஸ்மயா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

ஆஷிஷ் ஜோ ஆன்டனி தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையிலேயே மிரட்டுகிறார். வசனமே பேசாமல் பயமுறுத்துகிறார். ஸ்டண்ட் சில்வாவை அவர் அடிக்கும்போது, 'யோவ் அவரு ஃபைட் மாஸ்டர்யா' என்று நமக்கு சொல்ல தோன்றுகிறது.

ரவி எனும் அப்பா கதாபாத்திரத்தை சாய் குமார் நிறைவாக செய்துள்ளார். மனோஜ் கே.ஜெயன், மியா ஜார்ஜ் போன்ற நடிகர்களுக்கு பெரிய வேலை இல்லை.

ஒரு காட்சியில் வந்தாலும் வசனம் மற்றும் ஆக்ஷ்னில் மோகன்லால் அட்டகாசம் செய்துள்ளார்.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மிரட்டல்; ஜோமோன் டி.ஜான், அகில் ஜார்ஜ் மற்றும் சுதீப் எலமோனின் கேமரா ஒர்க் அருமை.

க்ளாப்ஸ்

விஸ்மயா மோகன்லால்

ஆக்ஷன் காட்சிகள்

முதல் பாதி

கிளைமேக்ஸ்   

பல்ப்ஸ்

முதல் பாதியில் இருந்து திரைக்கதை வேறு தளத்திற்கு மாறுவது

லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் குறைகள் இருந்தாலும் இந்த துடக்கத்தை கமர்ஷியலுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

ரேட்டிங்: 2.5/5 

LATEST News

Trending News

HOT GALLERIES