3 நாட்களில் ரூ.375 கோடியை அள்ளிய ராமாயணா! பார்ட் 2 வெளியாகுமா? ரசிகர்களிடையே எழுந்த கேள்வி!

3 நாட்களில் ரூ.375 கோடியை அள்ளிய ராமாயணா! பார்ட் 2 வெளியாகுமா? ரசிகர்களிடையே எழுந்த கேள்வி!

இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்றான ராமாயணா திரைப்படம், வெளியான மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.375 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கவனம் ஈர்த்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 5ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

மூன்று நாள் வசூல் விவரம்:

  • முதல் நாள் (நவம்பர் 5): ரூ.64.85 கோடி

  • இரண்டாம் நாள் (நவம்பர் 6): ரூ.48.05 கோடி

  • மூன்றாம் நாள் (நவம்பர் 7): ரூ.69.80 கோடி

இதன் மூலம் இந்தியாவில் மூன்று நாட்களில் ரூ.182.70 கோடி நிகர வசூலை இப்படம் பெற்றுள்ளதாக Sacnilk மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி NDTV தெரிவித்துள்ளது. உலகளவில் மொத்த வசூல் ரூ.375.50 கோடியை எட்டியுள்ளது.

ராமாயணா பார்ட் 2 வெளியாகுமா?

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக 2027 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகம், தற்போது 2028 தீபாவளிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரண்டாம் பாகம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வசூலைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவுக்கு உயர்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

LATEST News

Trending News