படத்தின் பட்ஜெட்டை பேசாதீங்க... படத்தைப் பற்றி பேசுங்கள்!” – செய்தியாளர்களிடம் கடுப்பான சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான VFX காட்சிகள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தனது புதிய திரைப்படமான ‘மாத்ருபூமி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், ராமாயணத்தை அதன் பட்ஜெட் அல்லது தொழில்நுட்ப அம்சங்களை வைத்து மட்டும் மதிப்பிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ராமர், ராவணன், சீதை ஆகிய கதாபாத்திரங்கள் மற்றும் இதிகாசத்தின் உண்மையான கருத்துக்கள் குறித்தே விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சல்மான் கானின் இந்தக் கருத்து தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.