அசிங்கமா போச்சு.. அந்த மாதிரி வீடியோ வேதனையில் வெடித்த கேப்ரில்லா
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா சார்ல்டன் சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருக்கிறார். அத்தோடு அப்பா படத்தில் குட்டிப் பெண்ணாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு மிகப்பெரிய தொகையோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். சின்னத்திரையை பொருத்த வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டாவது பகுதியில் காவியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் நடித்து வரக்கூடிய இவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு சிக்கு இருக்கக்கூடிய ரகசியம் பற்றி கூறியிருக்கிறார்.
எல்லோரும் ஜிம்முக்கு வெயிட்டை குறைக்க போவார்கள். ஆனால் இவர் வெயிட்டை ஏத்த ஜிம்முக்கு போனதாகவும் ஒரு நாளைக்கு பத்து இட்லி வரை சாப்பிட்டதாகவும் கூறியதோடு தற்போது உடல் எடையை குறைத்து விட்ட பின்னும் பல தன்னை பற்றி கமெண்டு அடிப்பதாக சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இவரது போட்டோவை யாரோ மாப்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டார்கள். அது உண்மை இல்லை என்று தெரிந்தவுடன் என் அம்மா என்னை மிக கொடுமையாக அடித்தார்கள் என்று சொன்னதோடு அந்த அடியை வாங்கிக் கொண்டு மூணு நாள் உறங்காமல் அழுத விஷயத்தையும் ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து இந்த மாதிரியான விஷயத்தை எப்படி டீல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது என்று அந்த பேட்டியில் பக்குவமாக கூறிய விஷயத்தை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இதைத் தொடர்ந்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது.