சிம்பு ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

சிம்பு ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள ’பத்து தல’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’பத்து தல’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒரு சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்களுக்கு இன்று இரட்டை விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES