எலிமினேஷனை அறிவித்த விஜய் சேதுபதி.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்
பிக் பாஸ் 8 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து சிவா வெளியேற்றப்பட்டுள்ளார். மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றுள்ள சிவா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என உறுதியாக தெரியவந்துள்ளது.
வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த சிவா, பெரிதாக எதுவும் வீட்டிற்குள் பண்ணவில்லை என நெட்டிசன்கள் கூறி வந்த நிலையில், தற்போது இந்த எலிமினேஷன் நடைபெற்றுள்ளது.