ரிலீஸுக்கு முன்பே வசூலில் பட்டையை கிளப்பும் துரந்தர் 2.. முன்பதிவு வசூல் விவரம்
கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை இந்திய சினிமாவிற்கு தேடி தந்தது என்பதை நாம் அறிவோம்.
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கன்னா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

துரந்தர் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வருகிற 19ஆம் தேதி இப்படம் உலகளவில் வெளியாகிறது.
இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படம் இதுவரை ரூ. 110 கோடி ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முதல் நாள் உலகளவில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.