பிறந்தநாள் பார்ட்டி.. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த நபர்.. வைரல் வீடியோ
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ் போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் அதீத பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சினிமாவில் வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
முக்கியத்துவம் வாய்ந்த கதையில்: திறமையான நடிகையான அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை
மலையாளத்தில் ஐஸ்வர்யா: தமிழ் மட்டுமின்றி அவர் மலையாள திரையுலகிலும் புலிமடா படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே மலையாளத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நடிப்பில் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.அதுமட்டுமின்றி கன்னடத்தில் உத்தரகாண்டா என்ற படமும் வரவிருக்கிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அவர் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு அருகே இருந்த நபர் ஒருவர், கேக் வெட்டி அவருக்கு ஊட்டிவிட்ட பிறகு ஐஸ்வர்யாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஐஸ்வர்யாவும் பதிலுக்கு ஒரு முத்தத்தை கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கேஷுவலாக முத்தம் பரிமாறப்படுகிறதே; நல்ல நட்பு என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.