ஒரு வார முடிவில் நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி?

ஒரு வார முடிவில் நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி?

நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் காமெடியனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சூரி.

குள்ளநரி கூட்டம் படத்தில் பரோட்டா சாப்பிட்ட காட்சியில் நடித்ததன் மூலம் சூரி பிரபலமானார். அதன்பிறகு அடுத்தடுத்து அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி காட்சிகள் நடித்து வந்தவர் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பை தரமாக வெளிப்படுத்தினார். இப்படத்தை தொடர்ந்து சூரி நடிப்பில் வெளியான மாமன் சூப்பர் டூப்பர் ஹிட். இப்போது கடைசியாக மண்டாடி திரைப்படம் வெளியாகியுள்ளது.

 

பாக்ஸ் ஆபிஸ்

பாய்மர படகு போட்டியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது, மொத்தம் 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாகி 1 வார முடிவில் இதுவரை ரூ. 45 கோடிக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்டில் இணைந்துள்ளது.

 

LATEST News

Trending News