அசோக் செல்வன் பொண்டாட்டி போட்ட டான்ஸ்.. கம்பத்தை பிடித்து காற்றில் மிதந்த கீர்த்தி பாண்டியன்!
சென்னை: தும்பா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 'அன்பிற்கினியாள்' படம் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பிடித்தவர் நடிகை கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர், சவாலே சமாளி படத்தை தயாரித்ததுடன், தனது 10 ஆண்டுக்கால காதலரான நடிகர் அசோக் செல்வனை திருமணமும் செய்து கொண்டவர். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Pole Dance ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுச் சோஷியல் மீடியாவை அதிர வைத்துள்ளார்.
கீர்த்தி பாண்டியன்: கீர்த்தி பாண்டியன், 'BECOMING' என்ற கலை நிகழ்ச்சிக்காகத் தான் மேற்கொண்ட தீவிர போல் டான்ஸ் பயிற்சிகளை பற்றி நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போல் டான்ஸ் ஷோவுக்காக தயாரான பயணம் முழுவதும் நிறைய பொறுமை, சுய கட்டுப்பாடு மற்றும் அளப்பரிய சுய அன்பு தேவைப்பட்டது. பயிற்சிகளின் போது ஏற்பட்ட தோற்றுப்போன தருணங்களை கடந்து, என்னை நானே மெதுவாகத் தேற்றி, மீண்டும் மீண்டும் முயன்றேன்.

நம்பிக்கை அளித்த டீம்: அனுஷா சாமி உருவாக்கிய இந்த பாதுகாப்பான தளம், எவ்வித பயமும் இன்றி நம் எல்லையைத் தாண்டி முயல உதவியது. 'ThePoleCamp' குழுவினர் நான் கீழே விழும் போதெல்லாம் எனக்காக கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். சோபியா பிரேம்குமார் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீனிவாசராஜா ஆகிய மாஸ்டர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஆரவாரம் செய்த ரசிகர்கள்: தனது சக கலைஞரான ஸ்ரேஷ்டாவுடன் சேர்ந்து ஸ்டேஜில் மேஜிக் செய்த கீர்த்தி பாண்டியன், வீடியோவின் இறுதியில் கம்பத்தில் ஏறி அந்த மிகக் கடினமான 'போல் டான்ஸ்' டரிக்கை (Trick) வெற்றிகரமாகச் செய்து முடித்ததும், அரங்கமே கைத்தட்டி ஆரவாரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை நிற ஆடையில் கம்பத்தில் தொங்கியபடி கீர்த்தி பாண்டியன் செய்த இந்த ஆபத்தான மற்றும் நேர்த்தியான போல் டான்ஸ் அசைவுகளை பார்த்த ரசிகர்கள், கீர்த்தி பாண்டியனுக்கு இப்படி ஒரு திறமையா, அசோக் செல்வன் கொடுத்து வைத்தவர், திறமையான மனைவி என வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.