எனக்கு தெரியாம என்னை ஃபாலோ பண்ணுவார்!! அனுபமா வெளியிட்ட வீடியோ..நெட்டிசன்கள் ரியாக்ட்..
அனுபமா
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில் பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரமுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அதனையடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா, சமீபத்தில் டாக்ஸிக்கான காதலரிடம் இருந்து தான் பட்ட கஷ்டங்களால் பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். அந்த உறவை நார்சிசிஸ்டிக் அபியூஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு தெரியாம என்னை
இந்நிலையில், அனுபமா சமீபத்தில் பகிர்ந்த வீடியோவில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், டீ குடித்தபடியே ரசிப்பது, பின் கதவுக்குப்பின் மறைந்திருந்து பார்ப்பது, ஸ்டைலாக போஸ் கொடுத்தபடியே ரசிப்பது என விதவிதமாக போஸ் கொடுத்திருந்தார்.
அந்த வீடியோவை மெர்ச் செய்து பல பெண்களும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அது அந்நேரத்தில் மீடியாவில் வைரலானது. இதை துருவ் விக்ரமை வைத்து தான் அனுபமா பகிர்கிறார் என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.