“சினிமா வேறு… அரசியல் வேறு!” விஜய்யை மறைமுகமாக விமர்சித்தாரா நடிகர் நெப்போலியன்? வைரலாகும் பேட்டி!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நெப்போலியன், நடிகர் விஜய் தொடர்பாக மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் யூடியூபர் இர்ஃபானுக்கு வழங்கிய பேட்டியில் சினிமா மற்றும் அரசியல் குறித்த தனது கருத்துக்களை நெப்போலியன் பகிர்ந்துள்ளார்.
அதில், “சினிமாவும் அரசியலும் நிழலும் நிஜமும் போன்றவை. சினிமாவில் நல்லது செய்வது போன்று நடிக்கலாம். ஆனால் அரசியலில் உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். சினிமா வேறு, அரசியல் வேறு” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவில் இருந்ததைப் போலவே அரசியலிலும் இருப்பார்கள் என நம்பி ஏமாந்தவர்கள் பலர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ளதால், நெப்போலியனின் இந்தக் கருத்துக்கள் விஜய்யை நோக்கிய மறைமுக விமர்சனமா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
எனினும், தனது பேட்டியில் விஜய்யின் பெயரைக் குறிப்பிட்டு நெப்போலியன் இந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.