கூடவே இருக்காரே யாருன்னு கேட்ட நெட்டிசன்!! பதிலடி கொடுத்த நடிகை அபிராமி..
அபிராமி வெங்கடாசலம்
பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார் நடிகை அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் ஒரு நபர் அபிராமி கூடவே இருக்காரே யாரு என்று அபிராமியின் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து கேள்வி கேட்டுள்ளார்.
இதனை பார்த்த அபிராமி, ரொம்ப முக்கியம் நாட்டு என்று கூறி, அவர் என்னுடைய நண்பர், தனியாக வெளியில் சென்றோம், உங்களின் முட்டாள் தனமான பதிவுகளில் நான் இடம்பெற விரும்பவில்லை, தயவு செய்து என் நண்பனை விட்டுவிடுங்கள்.
யாருடைய கண்டெண்ட்டிலும் நான் இருப்பது எனக்கு சிறிதும் கவலை இல்லை, என்னை என் வழியில் விட்டுவிடுங்கள் என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி.
