பணத்துக்காக அப்படி செய்பவர்களுக்கு ஏன் பதில் சொல்லணும்?.. அனுபமா பரமேஸ்வரன் அதிரடி

பணத்துக்காக அப்படி செய்பவர்களுக்கு ஏன் பதில் சொல்லணும்?.. அனுபமா பரமேஸ்வரன் அதிரடி

சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருப்பார் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் அவர் கடைசியாக டிராகன், பைசன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகியிருந்தன. இதற்கிடையே விக்ரமின் மகன் துருவ்வுடன் காதலில் இருந்தார். ஆனால் அந்தக் காதல் சர்ச்சைகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்தது.

பிரேமம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்தப் படத்தின் வெற்றி சாய் பல்லவிக்கு எப்படி கிரேஸை உருவாக்கியதோ அதேபோல் இவருக்கும் உருவாக்கியது. அதற்கு பிறகு தமிழில் கொடி திரைப்பட்த்தின் மூலம் அறிமுகமானார். அப்படமும் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவருக்கான மார்க்கெட் தென்னிந்திய மொழிகளில் ஏறியது. அந்தவகையில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கினார்.

Anupama Parameswaran Hits Back at Critics Says She Won t Respond to Paid Reviews

தமிழில் இரண்டு ஹிட்டுகள்: தமிழில் கடைசியாக அவர் டிராகன், பைசன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஒரு படத்திலும் மாடர்ன் பெண்ணாகவும், டீச்சராகவும், இன்னொரு படத்தில் கிராமத்து பெண்ணாகவும் நடித்து அசத்தியிருந்தார். அவரது நடிப்பும், அழகும் தமிழ் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாகவும் சில கோலிவுட் படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் தெரிகிறது.

துருவ்வுடன் காதல்?: இதற்கிடையே பைசன் படத்தில் நடித்தபோது விக்ரமின் மகன் துருவ்வுடன் ஏற்பட்ட பழக்கம் இரண்டு பேருக்கும் நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒரே இடத்துக்கு சென்ற புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகின. விரைவில் அவர்கள் தங்கள் ரிலேஷன்ஷிப் குறித்து பொதுவெளிக்கு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுபமாவின் இப்போதைய பதிவை பார்க்கையில் அந்த ரிலேஷன்ஷிப் முறிந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருந்தது.

உறுதி செய்த அனுபமா: அதனை அனுபமா பரமேஸ்வரனும் ஒரு பேட்டியில் உறுதி செய்தார். அந்த ரிலேஷன்ஷிப் ரொம்பவே டாக்சிக்காக இருந்ததாகவும்; நிறைய கஷ்டங்களை அதில் சந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார். அதில் துருவ்வின் பெயரை அவர் சொல்லாவிட்டாலும்; எல்லோருக்குமே அவரைத்தான் சொல்கிறார் என்பது புரிந்தது. இந்நிலையில் தன் மீது எழும் விமர்சனங்களுக்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.

அனுபமாவின் பதிலடி: சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், "ஒரு திரைப்படம் நன்றாக ஓடவில்லை என்றால் அதுகுறித்த விமர்சனங்கள் வருவது முக்கியமானதுதான். அவற்றை ஆரோக்கியமான முறையில் வைத்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திட்டமிட்டு பணம் பெற்றுக்கொண்டு விமர்சிப்பவர்களுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும். சோஷியல் மீடியாவில் வெளியாகும் அனைத்து விமர்சனங்களுக்கும் என்னால் ரியாக்ட் செய்ய முடியாது. இது திமிர் கிடையாது" என்றார்.

LATEST News

Trending News