புதிய அவதாரம் எடுக்கும் நடிகையாக கலக்கிய நித்யா மேனன்... நியூ என்ட்ரி

புதிய அவதாரம் எடுக்கும் நடிகையாக கலக்கிய நித்யா மேனன்... நியூ என்ட்ரி

நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் சும்மா காதல் படங்கள் நடிக்கலாம், ஹிட் கொடுத்துவிட்டு செல்வோம் என இருப்பார்கள்.

ஆனால் சில நடிகைகள் சின்ன கதாபாத்திரம் வந்தாலும் தன் நடிப்பு பெயர் சொல்லும் அளவிற்கு இருக்க வேண்டும், தரமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என கதைகள் தேர்வு செய்வார்கள்.

அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகை நித்யா மேனன். கடைசியாக நித்யா மேனன் நடிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை படம் வெளியாகி இருந்தது.

புதிய அவதாரம் எடுக்கும் நடிகையாக கலக்கிய நித்யா மேனன்... நியூ என்ட்ரி | Actress Nithya Menon Stepping Into New Zone

புதிய என்ட்ரி

நடிகையாக தன்னை நிரூபித்துள்ள நடிகை நித்யா மேனன் இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் கியூரி புரொடக்ஷ்ன் என்ற பெயரில் புது தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியிருந்தார் நித்யா மேனன்.

தற்போது நடிகை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கியூரி புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் லியோ விஷன் இரண்டு தயாரிப்பு நிறுவனம் சேர்த்து ஒரு படம் தயாரிக்கிறார்கள், இந்த படத்தை டி.கே. இயக்குகிறாராம். 

LATEST News

Trending News

HOT GALLERIES