டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்

டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள டாக்சிக் படத்தின் ரசிகர்களின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். அதுவும் கேஜிஎப் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் யாஷ் நடிப்பில் இந்த படம் வெளியாகிறது என்பதால், இந்திய சினிமாவே இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.

 

டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் | Toxic Movie Review By Fans

இயக்குநர் கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்க, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 

ரசிகர்கள் விமர்சனம்

இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். அதன்படி, படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் | Toxic Movie Review By Fans

"3 மணி நேர நீளமும், உயிரோட்டமற்ற வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படமாகவும் டாக்சிக் உள்ளது என்றும்; மோசமான கதாபாத்திர வடிவமைப்பு, திணிக்கப்பட்ட 18+ காட்சிகள், தொடர்பற்ற காட்சிகள், பலவீனமான வசனங்கள் மற்றும் எமோஷனல் கனெக்ட் இல்லை" என்றும் விமர்சனத்தில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், "இயக்குனர் கீது ஒரு மிகச் சலிப்பூட்டும் படத்தை வழங்கியுள்ளார் என்றும், படத்தில் உள்ள நல்ல விஷயம் ஒளிப்பதிவு மட்டும்தான்" என்றும் கூறியுள்ளார்கள்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES