தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்

The Dark Heaven Movie Review: சீரியலில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் சித்து தற்போது 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார். மிஸ்டரி க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

 

கதைக்களம்

'தி டார்க் ஹெவன்' என்கிற அமானுஷ்யம் நிறைந்த புத்தகம் ஒன்று நூலகத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கிடைக்கிறது. அதில் எழுதியிருக்கும் உள்ள விஷயங்களை அவர் படிக்க, அவை அப்படியே நிஜத்திலும் நடக்கிறது.

மேக்கரை என்கிற கிராமத்தில் 7 வருடங்களுக்கு ஒருமுறை, அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும் ஆண்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் சாபம்தான் இந்த மரணங்களுக்கு காரணம் என ஊர் மக்களால் நம்பப்படுகிறது.

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம் | The Dark Heaven Movie Review

அதே நேரத்தில், கிராமத்தை சுற்றி ஒரு சைக்கோ கொலையாளி உலா வருவதாகவும் தகவல்கள் மக்களிடையே பரவுகின்றன. தொடர்ந்து பல கொலைகளை அவன் செய்து வர, மக்களிடையே பெரும் அச்சம் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஜூன் மாத தொடக்கத்தில் மேக்கரை கிராமத்திற்கு தனது குடும்பத்துடன் வருகிறார் இன்ஸ்பெக்டர் சித்து.

ஒவ்வொரு மரணத்திற்கு பின்னால் உள்ள ரகசியத்தை அவர் தேடும்போது, பல சவால்களை எதிர்கொள்கிறார். இதில் அவர் மனைவியும் கொலைசெய்யப்பட, இதன்பின் அவர் எப்படி இந்த வழக்கை முடித்தார்? யார் அந்த கொலையாளி? இதற்கெல்லாம் பின்னால் உள்ள மர்மம் என்ன? தி டார்க் ஹெவன் புத்தகத்திற்கும் இப்போது நடக்கும் சம்பவங்களுக்கு என்ன சம்பந்தம் என்பதே படத்தின் மீதி கதை.

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம் | The Dark Heaven Movie Review

படத்தை பற்றிய அலசல்

தி டார்க் ஹெவன் என்கிற தலைப்பிற்கு ஏற்றார் போலவே கதைக்களமும், காட்சி அமைப்பும் உள்ளது. க்ரைம் திரில்லர் என்றாலே, ஒரு மரணம் அதை விசாரிக்க வரும் போலீஸ் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன, அதை எப்படி சுவாரஸ்யமான முறையில் திரைக்கதையில் இயக்குநர் வழங்கியுள்ளார் என்பதே முக்கியம். அதை இயக்குநர் பாலாஜி சரியாக செய்துள்ளார்.

மர்மம், திகில், எதிர்பாரா திருப்பங்கள், பின்னணி இசை என அனைத்தும் படத்தின் மீதான பரபரப்பை அதிகரிக்கின்றன. குறிப்பாக முதல் பாதி அவிழ்க்கவே முடியாத அளவிற்கு திரைக்கதையில் போடப்பட்ட சுவாரஸ்யமான முடிச்சுகள் வேற லெவல். அதன்பின், கிளைமாக்ஸ் நோக்கி நகரும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன. கொலையாளி ட்விஸ்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். எளிதாகவே யார் அந்த கொலையாளி என்பதை கணிக்க முடிந்தது.

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம் | The Dark Heaven Movie Review

கதாநாயகன் சித்து படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருக்கிறார். இறுக்கமான மற்றும் கம்பீரமான உடல்மொழியோடு கதைக்களத்திற்கு ஏற்ற நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக விசாரணை செய்யும் அணுகுமுறை, அதில் அவர் வசனங்களை பேசிய விதம் அனைத்தும் நன்றாக இருந்தது. சண்டை காட்சிகள் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்.

வில்லனாக வரும் நடிகர் கிளைமாக்ஸில் பட்டையை கிளப்பியுள்ளார். மேலும், ரித்விகா, தர்ஷிகா, நிழல்கள் ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறை எதுவும் இல்லை. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். முதல் காட்சியில் தொடங்கி, போஸ்ட் கிரெடிட் சீன் வரை பின்னணி இசை மிரள வைக்கிறது.

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம் | The Dark Heaven Movie Review

 

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • சித்து மற்றும் அனைவரின் பங்களிப்பு
  • முதல் பாதி மற்றும் கிளைமாக்ஸ்
  • பின்னணி இசை
  • திகில் மூட்டும் காட்சிகள்

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • கொலையாளி யார் என்று எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது
  • சொதப்பலான ஆக்ஷன் காட்சிகள்

மொத்தத்தில் க்ரைம் திரில்லர் கதைகளின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்துதான் இந்த 'தி டார்க் ஹெவன்'.

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம் | The Dark Heaven Movie Review

LATEST News

Trending News