விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய சினேகா... என்ன இப்படி சொல்லிட்டாங்க
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் விவாகரத்து அதிகம் நடந்து வருகிறது. பல பிரபலங்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது என்றே கூறலாம்.
சமந்தா-நாக சைத்தன்யா, ஜெயம் ரவி-ஆர்த்தி, தனுஷ்-ஐஸ்வர்யா போன்றவர்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
பிரபலங்களின் விவாகரத்து குறித்து அண்மையில் ஒரு நிகழ்ச்சி தனது கணவருடன் கலந்துகொண்ட சினேகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், திரைத்துறையில் விவாகரத்து நடப்பதைத் தடுக்க அறிவுரை எல்லாம் சொல்ல முடியாதுங்க.
எல்லோருக்கும் அவங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதை நாம் மதிக்கணும் என கூறியுள்ளார்.