19 வயசுலையே.. அது அவ்ளோ பெருசா.. நெறைய பேர் என்கிட்டே கேட்டாங்க.. பிரிகிடா சாகா வேதனை…!
ஜனவரி 2000 ஆவது ஆண்டில் 14ஆம் தேதி பிறந்த பிரிகிடா சாகா ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகையாக திகழ்கிறார். இவர் 2020 இல் வர்மா, வேலன், இரவின் நிழல், கருடன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இணைய தொலைக்காட்சி தொடரான ஆகா கல்யாணத்தில் பவி டீச்சராக பக்காவாக நடித்து பலரது மனதையும் கொள்ளையடித்ததை அடுத்து தனது 19 வயதிலேயே பவி டீச்சராக நடித்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்ததை ஓபனாக பேட்டியில் பேசி இருக்கிறார்.
அந்தப் பேட்டியில் இளம் வயதிலேயே அதாவது 19 வயதிலேயே பவி டீச்சர் என்ற ஒரு மிகப்பெரிய கேரக்டரை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்ததாகவும் இதை அடுத்து நான் வயதில் அதிகமாக இருப்பேன் என்று பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லி இருந்ததாக சொல்லி இருக்கிறார்.
மேலும் சில ரசிகர்கள் இவரிடம் 25 வயதுக்கு மேல் இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியதாக சொன்ன இவர் அப்போது தனக்கு 19 வயது மட்டும் என்பதை சொன்னால் யாருமே நம்பவில்லை என்ற தகவலையும் தந்திருக்கிறார்.
எனவே சின்ன வயதில் கூட நல்ல மெச்சூரிட்டியான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து குறும்படங்கள் பலவற்றில் நடித்ததாக சொன்ன அவர் அவளோடு அவன் கண் பேசும் வார்த்தைகள், தோள் கொண்டு என் கண்ணோடு போன்ற குறும்படங்களில் நடித்தவற்றையும் சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் செந்தூரம் என்ற படத்தில் 2023 ஆம் ஆண்டு முக்கிய கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர்கள் அனைவரும் 19 வயசிலேயே அது அவ்வளவு பெரிய கேரக்டரோட எப்படி பண்ணுனீங்க என்று தன்னிடம் பலரும் கேட்டதாக பிரிகிடா சாகா சொன்ன விஷயம் தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.