ரெண்டு மணி நேரம் பண்ணுவேன்.. அவரும் விடாம பண்ணுவாரு.. கூச்சமின்றி சொன்ன நிக்கி கல்ராணி..!
நடிகை நிக்கி கல்ராணி சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய கணவருக்கு பிடிக்காத விஷயம் பற்றியும் ஆனாலும் அதனை அவர் எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது, அவருக்கு நேரம் என்பது மிக மிக முக்கியமான விஷயம். நான் ஒரு இடத்துக்கு கிளம்புகிறேன் என்றால் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் லேட் பண்ணுவேன்.
ஆனால், அது தெரிந்து அவரும் விடாமல் காத்திருப்பார். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு ஆறு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றால் நான் எட்டு மணிக்கு தான் வருவேன் என அவருக்கு தெரியும்.
இருந்தாலும் ஆறு மணியில் இருந்து அவர் காத்திருப்பார். தாமதமாக ஒரு விஷயத்தை செய்வது என்பது அவருக்கு பிடிக்காது.
ஆனால் இதுவரை நான் எத்தனையோ முறையை தாமதமாக சென்றும் அவர் என்னிடம் கோபப்பட்டது கிடையாது.
அவரும் என்னோடு சேர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பார் என பேசி இருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.
இப்படி லேட் பண்ணும் ஒரு மனைவிக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும் என்றால் என்ன தண்டனை குடுப்பீங்க..? என்று அவருடைய கணவர் ஆதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஆதி, அவள் என்னை திருமணம் செய்து கொண்டதே அவளுக்கு பெரிய தண்டனை தான்.
அதை தாண்டி பெரிய தண்டனை என்ன கொடுப்பது என சிரித்தபடி பதில் கொடுத்து இருக்கிறார்.