ஜனனிக்கு மாறி மாறி லவ் புரபோஸ் செய்த 2 போட்டியாளர்கள்.. என்ன நடக்கும்?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான ஜனனிக்கு இரண்டு சக போட்டியாளர்கள் மாறி மாறி லவ் புரபோஸ் செய்த காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் ஜனனி, மகேஸ்வரி, ஆயிஷா, ராம், மணிகண்டன், அசல் கோளாறு உள்ளிட்டவர்கள் பொழுதுபோக்கிற்காக ஒரு ஆடிஷன் போன்று நடத்தலாம் என்று கூறுகின்றனர். ஒரு பெண்ணிடம் காதல் புரபோஸ் செய்வது எப்படி என்பது குறித்து தான் அந்த ஆடிஷன் நடந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக ஜனனியிடம் மணிகண்டன் புரபோஸ் செய்கிறார். அவர் புரபோஸ் செய்த நடிப்பை பார்த்து ஜனனியே சிறிது ஆச்சரியம் அடைந்தார்.
இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக ஜனனியிடம் அசல் கோளாறு தனது பாணியில் ஒரு ராப் பாட்டை பாடி, ‘என்னை உனக்கு பிடிக்குதா பிடிக்கவில்லையா? என்று சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் இனிமேல் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்றும் அசத்தலாக நடித்து காட்டுகிறார்.
இதனை அடுத்து ஆயிஷாவுக்கு ராம் புரபோஸ் செய்வது போன்ற காட்சியும் உள்ளது. மொத்தத்தில் இந்த பொழுதுபோக்கு காமெடி காட்சிகள் ரசிக்கும் வகையில் இருந்தது.
ஆனால் நடிப்புக்காக புரபோஸ் செய்யும் இந்த போட்டியாளர்கள் உண்மையிலேயே ஜனனிக்கு இந்த சீசன் முடிவதற்குள் புரபோஸ் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.