விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளையும் சீரியல் நடிகர்தான்!

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளையும் சீரியல் நடிகர்தான்!

விஜய் டிவி உள்பட முன்னணி தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வரும் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சுந்தரி நீயும் சுந்தரி நானும்’ என்ற சீரியலில் தமிழில் அறிமுகமானவர் நடிகை தேஜஸ்வி கெளடா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’தென்றல் வந்து என்னை தொடும்’ ஜீ தமிழில் ஒளிபரப்பான ’வித்யா நம்பர்-1’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகை தேஜஸ்வி கவுடா தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை தேஜஸ்வியை திருமணம் செய்ய இருப்பவரும் ஒரு சீரியல் நடிகர் தான் இவரது பெயர் அமர்தீப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமர்தீப் சீரியல் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் சில படங்களில் நடித்து வருகிறார். அமர்தீப்- தேஜஸ்வி கெளடாநிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து விரைவில் திருமணம் நடைபெறும் என்பது என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

HOT GALLERIES