41 வயதில் மாடர்ன் லுக்கில் அசத்தும் விஜே டிடி..புகைப்படங்கள்..
விஜே டிடி
காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையில் டிடிக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டு, சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை தவறாக அமைந்துவிட்டது.

அதனால் மற்றொரு சிகிச்சை செய்ய அதுவும் சரியாக வரவில்லை. இப்படி காலில் ஏற்பட்ட பிரச்சனையால் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் ஒருசில பட விழாக்களை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது 40 வயதை தாண்டியிருக்கும் டிடி, மாடர்ன் லுக்கில் எடுத்த அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.










