நடிகர் விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பில் பைக்கில் ஊர் சுற்றிய புகழ்- வைரல் புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை பற்றி பேசாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
வாரம் முழுவதும் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டராக உள்ளது இந்நிகழ்ச்சி. ஆரம்பம் முதல் இறுதி நிகழ்ச்சி முழுவதும் மக்கள் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும் படியாக இருக்கும்.
அப்படிபட்ட இந்நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகிறது. அரைஇறுதி நிகழ்ச்சி அண்மையில் நடந்தது, அதில் அஷ்வின், கனி, பாபா பாஸ்கர் 3 பேர் தேர்வானார்கள்.
இறுதி நிகழ்ச்சி எப்போது என்று தான் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிகழ்ச்சியின் போதே பல படங்களில் கமிட்டாகி பிஸியாக அதில் நடித்து வருகிறார் புகழ்.
சந்தானம் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் விஜய் சேதுபதியுடன் பைக்கில் புகழ் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அவர்களின் புகைப்படங்கள்,