பிக்பாஸில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேறும் அந்தவொரு போட்டியாளர் யார்...
பிக்பாஸில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷனில் போட்டியாளர் ஒருவர் வெளியேற போகிறார்.
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் மிட் வீக் எவிக்ஷன் இடம்பெறவுள்ளது. இதற்காக போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களின் படங்கள் துண்டங்களாக வெட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனை நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் சரியாக ஒழுங்கு செய்ய வேண்டும்.
கடைசியாக யாருடைய முகம் ஒழுங்காக வரவில்லையோ அந்த போட்டியாளர் இன்றைய தினம் போட்டியை விட்டு வெளியேற போகிறார்.
இதனால் நாமினேட் செய்யப்பட்ட அனன்யா, விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், நிக்ஷன் உள்ளிட்டோர் பெட்டியுடன் தயாராகவுள்ளனர்.
மாறாக வாக்குகள் அடிப்படையில் அனன்யா வெளியேறலாம் என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.