மிக்ஜம் புயல் – நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நன்கொடை..! – எவ்வளவு தெரியுமா..

மிக்ஜம் புயல் – நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நன்கொடை..! – எவ்வளவு தெரியுமா..

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜம் புயலின் சேதங்களை சரிப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது என அரசு தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.

இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள், பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் மிக்ஜம் புயல் ஏற்படுத்திய சேதங்களை துரிதமாக சரிப்படுத்த முடியும். அரசு தரப்பில் இருந்து மிக்ஜம் புயலின் சேதங்களை சரிப்படுத்த துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மூலமாக செலவு செய்வதை விடவும் நேரடியாகவே மக்களுக்கு உதவி செய்யலாமே..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே சமயம் ஒரு நடிகராக இந்த பேரிடரின் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தன்னுடைய கரத்தை கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகளையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES