பிக் பாஸ் 6 பிரம்மாண்ட தொடக்க விழா! Live Updates
பிக் பாஸ் 6வது சீசன் தொடக்க விழா இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதன் லைவ் அப்டேட்ஸ் இதோ.
கமல் என்ட்ரி
கமல் ஹாசன் ஸ்டேஜுக்கு என்ட்ரி கொடுக்கும் முன்பு, முந்தைய சீசன் போட்டியாளர்கள் பலரும் முந்தைய சர்ச்சையான நிகழ்வுகளை மீண்டும் செய்து காட்டி கொண்டிருக்கின்றனர். அதன் பின் "வேட்டைக்கு ரெடியா" என்ற வசனத்தை கூறிவிட்டு மேடைக்கு மாஸாக வருகிறார்.
அதன் பின் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வோம் என கூறி நேராக அங்கே சென்று வீட்டை சுற்றி காட்டுகிறார்.
ஜிபி முத்து - முதல் போட்டியாளர்
ஜிபி முத்து அவரது குடும்பம் மற்றும் பின்னணி பற்றி ஒரு வீடியோ காட்டப்பட்டது. அதன் பின் கையில் லெட்டர் பையோடு தான் மேடைக்கு கமல் முன்பு வந்து நிற்கிறார். அவரது குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்து பேசி ஜிபி முத்துவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்.