சரிகமப சீசன் 5ன் 5வது பைனலிஸ்ட் இவர்தான்!! மிரண்டு போன ஆண்ட்ரியா..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. தற்போது சீசன் 5 நிகழ்ச்சியில் இறுது சுற்று போட்டியாளர்களை தேர்வு செய்யும் ரவுண்ட்கள் நடந்து வருகிறது.
ஏற்கனவே, சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன், செந்தமிழன் என 4 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் கடைசியாக 5வது இறுதி சுற்றுப்போட்டியாளருக்கான Ticket to finale ரவுண்ட் நடந்துள்ளது. இந்த வாரம் சிறப்பாக பாடும் போட்டியாளர் 5வது பைனலிஸ்ட் இடத்தை பிடிப்பார்.
அப்படி சிறப்பாக பாடிய ஷிவானி தான் சரிகமப சீசன் 5ன் 5வது இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.