மனைவிக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸான பரிசு... அப்படியென்ன கொடுத்தார்னு தெரியுமா?

மனைவிக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸான பரிசு... அப்படியென்ன கொடுத்தார்னு தெரியுமா?

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் தனது மனைவிக்கு கொடுத்துள்ள பரிசு குறித்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் தற்போது அரசியலில் அதிரடி காட்டி வருகின்றார். இவர் கடைசியாக நடித்துள்ள படம் ஜனநாயகன் ஆகும்.

இப்படம் ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்காக வெளியாக இருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக தற்போது நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனைவிக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸான பரிசு... அப்படியென்ன கொடுத்தார்னு தெரியுமா? | Vijay Surprise Gift To Wife Sangeetha Viral Video

இதனால் படத்தில் வெளியீடு தள்ளிப்போயுள்ளதுடன், கரூரில் தவெக கட்சி மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கும் நடிகர் விஜய்யிடம் விசாரணை சமீபத்தில் நடைபெற்றது.

அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வரும் விஜய், அதிலிருந்து விரைவில் வெளிவருவார் என்றும் இந்த மாதம் படம் வெளியாகிவிடும் என்று கூறப்படுகின்றது.

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பின்பு மனைவி குறித்த பேச்சு, இருவரும் சேர்ந்து செல்லும் நிகழ்ச்சி என எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் விஜய் மனைவியை பிரிவதாக தகவல் வெளியானது.

ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது வேலையை பார்த்து வருகின்றார். தற்போது விஜய் தனது மனைவிக்கு பரிசு கொடுத்ததாக காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

மனைவிக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸான பரிசு... அப்படியென்ன கொடுத்தார்னு தெரியுமா? | Vijay Surprise Gift To Wife Sangeetha Viral Video

குறித்த காணொளியில் விஜய்யின் மனைவி சங்கீதா, கையில் வாட்ஸ் ஒன்றினை வைத்துக் கொண்டு இது தனது கணவர் அனுப்பியிருப்பார்... ரொம்ப நாள் கேட்டுக்கொண்டிருந்தேன்... நன்றி விஜய்... எதிர்பாராத சர்ப்ரைஸ் என்று கூறியுள்ளார்.

விஜய்யின் மனைவி இவ்வாறு கூறியுள்ள காணொளியினை தொண்டர்களும், ரசிகர்களும் வைரலாக்கி வருவதுடன், முதலமைச்சரின் மனைவிக்கு கொடுத்த பரிசு என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

மனைவிக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸான பரிசு... அப்படியென்ன கொடுத்தார்னு தெரியுமா? | Vijay Surprise Gift To Wife Sangeetha Viral Video

LATEST News

Trending News