ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

நடிகர் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது. இந்த திரைப்படம் அரவிந் சாமிக்கு மீண்டும் ஒரு பீக்கை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் ரஜினிகாந்திற்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் அரவிந்த் சாமி.

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது? | Arvind Swami Opens Up About His 2005 Accident

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீக்காத இடத்தை பிடித்து விட்டார். அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ‘ரோஜா’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து ,மின்சார கனவு, பாம்பே, இந்திரா, என் ஸ்வாச காற்றே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது? | Arvind Swami Opens Up About His 2005 Accident

குறுகிய காலத்திலேயே சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தையும் ஒரு ரசினர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்ட இவர் தீடீர் என சினிமாவில் இருந்து சிறுது காலம் விலகியிருந்தார்.

இந்நிலையில், குறித்த இடைவெளிக்கான காரணம் தொடர்பில், அரவிந்த் சாமி, சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது பேசியிருந்தார்.

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது? | Arvind Swami Opens Up About His 2005 Accident

அதில் அவர் குறிப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு விபத்து தன்னை ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுத்த படுக்கையாக மாற்றிவிட்து எனவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்ததாகவும், அதனால் பல நாட்கள் வலியில் அவதிப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது? | Arvind Swami Opens Up About His 2005 Accident

இறுதியில் ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நேரத்தில் தான் கேரளாவை சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரை சந்தித்தாராம். அவரிடம் சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே, தான் நடக்க தொடங்கியதாகவும், தனக்கு ஆயுர்வேத சிகிச்சை நன்றாக பலன் கொடுத்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று தான் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திய அவர், அது தனது தனிப்பட்ட அனுபவம் என்பதையும் தெளிவுப்படுத்திக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த விபத்து ஏற்பட்ட போது முதுகுத்தண்டில் அடிப்பட்டது. இதனால், அவரது காலின் ஒரு பகுதி செயலிழந்தது எனவும், படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது? | Arvind Swami Opens Up About His 2005 Accident

அந்த சமயத்தில் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து, 2 வருடம் உடல் நிலையில் மாத்திரமே கவனம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

அரவிந்த் சாமி காயத்ரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 2010ல் காயத்ரிக்கும் அரவிந்த் சாமிக்கும் விவாகரத்து ஆனது. இதையடுத்து 55 வயதாகும் அரவிந்த் சாமி தற்போது சிங்கிளாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    

LATEST News

Trending News