என் நீண்ட நாள் கனவு நனவாகுது.. ரஜினிக்கு ஜோடியாகும் சிம்ரன்.. இணையத்தைக் கலக்கும் இன்ஸ்டா பதிவு!

என் நீண்ட நாள் கனவு நனவாகுது.. ரஜினிக்கு ஜோடியாகும் சிம்ரன்.. இணையத்தைக் கலக்கும் இன்ஸ்டா பதிவு!

சென்னை: தமிழ் சினிமாவில் 'சந்தாவோ சந்தா' என ஒற்றை நடனத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த இவர், கடந்த ஆண்டு வெளியான 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் மாஸாக ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிக்கும் 'தர்மன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான மாடர்ன் புகைப்படங்களைப் பகிர்ந்து, ரஜினியுடன் நடிப்பது குறித்து பதிவிட்டுள்ளார்.

நடிகை சிம்ரன்: இதில், சில கனவுகள் நினைவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது 'பேட்ட' படத்தின் மூலமே நிறைவேறியது. அந்தப் படத்தில் என்னுடையது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆனால், இன்று 'தர்மன்' படத்தில் மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில், அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாகச் சில காட்சிகளில் மட்டுமே வந்த சிம்ரன், இந்த 'தர்மன்' திரைப்படத்தில் படம் முழுக்க வரக்கூடிய மிக முக்கியமான வெயிட்டான கதாபாத்திரத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஸ்வந்த் மாரிமுத்து: ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'டிராகன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து. கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த 'தர்மன்' திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 90-களில் ரஜினி-சிம்ரன் காம்போ அமையாதா என ஏங்கிய ரசிகர்களுக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து 'தர்மன்' படம் மூலம் அந்த ஆசை நிறைவேறி உள்ளது.
 

 

LATEST News

Trending News

HOT GALLERIES