மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் பயன்பெறும் மக்கள்.. பலருக்கு தெரியாத தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு மகாராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர், இந்த ஆண்டு தலைவன் தலைவி படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார்.
ஒரு பக்கம் சினிமாவில் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் விஜய் டிவியின் பிக்பாஸ் 9வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி மறைமுகமாக செய்து வரும் நல்ல விஷயம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஆம், 'துளி' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறார். இந்த கடை சென்னை அடையாறு பகுதியில் உள்ளது.
