25 வயசுல வாழ்க்கை முடிஞ்சி போச்சு..மகனுடன் தனியா வாழ்றேன்!! நடிகை சசிலயா எமோஷனல்..

25 வயசுல வாழ்க்கை முடிஞ்சி போச்சு..மகனுடன் தனியா வாழ்றேன்!! நடிகை சசிலயா எமோஷனல்..

தமிழில் பகாசுரன், ஒயிட் ரோஸ், மதராஸ் மாஃபியா கம்பெனி, கிப்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சசிலயா. சினிமா மட்டுமில்லாமல் மீனாட்சி பொண்ணுங்க, இதயம் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

25 வயசுல வாழ்க்கை முடிஞ்சி போச்சு..மகனுடன் தனியா வாழ்றேன்!! நடிகை சசிலயா எமோஷனல்.. | Actress Sasilaya Painful Interview About Her Son

சமீபத்தில் சசிலயா அளித்த பேட்டியொன்றில் தனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், நான் கர்ப்பமாக இருக்கும்போது எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. என் மகன் பிறக்கும்போது எனக்கு 25 வயது.

அந்த வயதில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இப்போது என் மகனுக்கு 11 வயதாகிறது. கிட்டத்தட்ட 11 வருடங்களாக நான் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். என் மகன் எல்கேஜி படிக்கும்போது, அப்பானா யாரும்மா என்று கேட்டான். அந்த வார்த்தை எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது.

ஏனென்றால் நான் என் அப்பாவை நைனா என்று தான் அழைப்பேன், அதனால் அந்த வார்த்தை என்ன என்று என் மகனுக்கு தெரியததால், அப்படியொரு வார்த்தையை கேட்டான். அதை என்னால் தாங்க்க்கொள்ளவே முடியவில்லை. அப்படியே நொறுங்கிவிட்டேன்.

ஆனால் அதன்பின் என் மகன் அதைப்பற்றி கேட்பதே இல்லை. அவனுக்கு நன்றாக புரிதல் வந்துவிட்டது. நமக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான், அம்மாவிற்கு சில கடமைகள் இருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் சசிலியா.

LATEST News

Trending News