A.I பெரிய பிரச்சனை.. கீர்த்தி சுரேஷ் பார்த்து பயந்துபோன அந்த வீடியோ இது தான்..!

A.I பெரிய பிரச்சனை.. கீர்த்தி சுரேஷ் பார்த்து பயந்துபோன அந்த வீடியோ இது தான்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் ஒரு பேட்டியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து தனது ஆழமான பயத்தையும், பதட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, நடிகைகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பயன்படுத்தி ஆபாசமாகவும், அவமானகரமாகவும் மாற்றி சமூக வலைதளங்களில் பரப்புவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழாவில் அவர் தாவணி சேலை அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோக்களில், அவரது ஆடைகளை விலக்கி உடலை வெளிக்காட்டுவது போலவும், அருகில் நின்ற விஜய் தேவரகொண்டாவுக்கு உதட்டில் முத்தமிடுவது போலவும் மிகவும் யதார்த்தமாக எடிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த போலி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "இந்த வீடியோக்களைப் பார்த்தால், நாமே ஒரு நிமிடம் 'இது உண்மையிலேயே நடந்ததா?' என்று சந்தேகப்படும் அளவுக்கு யதார்த்தமாக இருக்கிறது. AI இப்படி போலியான வீடியோக்களை உருவாக்கி பரப்புவது மிகப்பெரிய பிரச்சினை. இதைச் செய்பவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது? இதனால் எனக்கு எரிச்சலாகவும், பயமாகவும் இருக்கிறது" என்று தனது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு ரஷ்மிகா மந்தனா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகைகளும் AI டீப்ஃபேக் வீடியோக்களால் பாதிக்கப்பட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், ஒட்டுமொத்த நடிகைகள் சார்பிலும் முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் இவ்வாறு தைரியமாக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு பெண்களின் தனியுரிமையையும், மரியாதையையும் பறிக்கும் வகையில் உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் இணைய உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், AI டீப்ஃபேக் போலி உள்ளடக்கங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த எதிர்ப்பு, பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.

LATEST News

Trending News