ஷூட்டிங்கில் 10 பேர் அடிக்க வந்தாங்க..அஜித் சார் சொன்ன வார்த்தை!! பிரபல நடிகர் ஓபன்..

ஷூட்டிங்கில் 10 பேர் அடிக்க வந்தாங்க..அஜித் சார் சொன்ன வார்த்தை!! பிரபல நடிகர் ஓபன்..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து, வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பாவா இலட்சுமணன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நடிகர் அஜித்துடன் பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

ஷூட்டிங்கில் 10 பேர் அடிக்க வந்தாங்க..அஜித் சார் சொன்ன வார்த்தை!! பிரபல நடிகர் ஓபன்.. | 10 People Come To Beat Ajith Sir Words Tamil Actor

அதில், ஜனா பட சூட்டிங், பார்டர் தோட்டத்தில் நடந்தது. அப்போது 100 பேருக்கு மேல மொட்டை போட்டுட்டு வந்துட்டாங்க. நான் போய் சார் கிட்ட சொன்னேன். ஏண்டா மொட்டை அடிச்சீங்கன்னு கேட்டாரு. தல நீங்க மொட்டை போட்டீங்க, அதான் நாங்க மொட்டை போட்டோம்னு சொன்னாங்க.

சளிக்காமல் எல்லாருடனும் மேலை கைப்போட்டு போட்டோ எடுத்துக்கிட்டாரு அஜித் சார். நான் ஒருத்தர் ஒருத்தரா விளக்கிவிடுவேன். அப்புறம் சார் சாப்பிட போய்ட்டாரு.

நான் வந்துட்டே இருக்கேன், என்னது தெரியல 10 பேர் என்ன அடிக்க வந்துட்டாங்க. நான் ஓடிப்போய் அஜித் சார் கிட்ட சொன்னேன்.

நீங்க என்ன பாக்க வந்தீங்க, பாத்தீங்க, போட்டோ எடுத்தீங்க, அவர் அவரோட வேலையை செஞ்சாரு, அவர ஏண்டா அடிக்க வர்றீங்க போங்கடான்னு சொன்னாரு. ஒரு வார்த்தைக்கூட பேசாம அவங்க போய்ட்டாங்க என்று பாவா இலட்சுமணன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

LATEST News

Trending News