நயன்தாரா, த்ரிஷா இல்லை.. ஒரு ஆண்டில் 7 படங்கள், சாதனை படைத்த நட்சத்திர நடிகை!
பொதுவாக முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இரண்டு மூன்று படங்கள் நடித்து விடுவர். ஆனால், ஒரு நட்சத்திர கதாநாயகி ஒரே வருடத்தில் ஏழு படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவரது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுபமா தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் பைசன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.