என்ன மாதிரி ஆளுங்க முன்னேறக்கூடாதா!! அழுது புலம்பிய பிக்பாஸ் ரியா..

என்ன மாதிரி ஆளுங்க முன்னேறக்கூடாதா!! அழுது புலம்பிய பிக்பாஸ் ரியா..

பிக் பாஸ் 8ல் தற்போது 20 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் 13 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இதில் நாமினேட் ஆகியிருந்த, தீபக் எலிமினேஷன் ஃப்ரீ பாஸ்-ஐ பெற்று, அதிலிருந்து தப்பித்தார்.

என்ன மாதிரி ஆளுங்க முன்னேறக்கூடாதா!! அழுது புலம்பிய பிக்பாஸ் ரியா.. | Bigg Boss Tamil 8 Contestant Riya Emotional Videoஅவரை தவிர்த்து நாமினேட் ஆகியிருக்கும் 12 போட்டியாளர்களில், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றுள்ள, ரியா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். வைல்டு கார்டு போட்டியாளராக உள்ள வந்த ரியா இரண்டு வாரங்கள் தாக்குபிடித்த நிலையில், கடந்த வாரம் Eviction செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரியா அழுதபடி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டுள் நான் ஏதோ ஒன்று பண்ணேன் என்ற விசயம் நிச்சயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். அப்படி இருந்தும் நீங்க எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. இது எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. பிரபலமாக இல்லாததால் ஆதரவு இல்லைஎன்று நினைக்க தோன்றுகிறது.

என்னை மாதிரியான ஆட்கள் முன்னேறக்கூடாதா. அப்படி மீறி வெளியில் வந்தாலும் நீங்க சப்போர்ட் பண்ண மாட்டிங்களா? என்ற கேள்வி என் மனதில் ஓடிக்கிட்டு இருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி வெளியில் வரப்போகிறேன் என்று தெரியவில்லை, இருந்தாலும் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என்று பல கேள்விகளை முன் வைத்து பேசி அழுதிருக்கிறார் ரியா.

 

LATEST News

Trending News

HOT GALLERIES