சேலையில் அசத்தலான போட்டோஷூட் நடத்திய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா.. வீடியோ இதோ
சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜின் இரண்டாம் திருமணம் எபிசோட்கள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

தனது குடும்பத்திற்கு தெரியாமல் கனகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் மனோஜ். அதுவும் ரோகிணியிடம் இருந்து இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில், மனோஜ் இப்படி செய்திருப்பது மிகப்பெரிய பின்விளைவை அவரது குடும்பத்திற்கு தரப்போகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி ப்ரியா. சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அசத்தலான போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க: