6 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கட்டா குஸ்தி 2
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அந்த திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்ப்போம். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வசூல் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி 2022-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 6 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 28 கோடி வசூலித்துள்ளது.
